Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Kaviperarasu Vairamuthu Speaks About Jallikattu In His Poetic Way!

Tuesday, January 10th, 2017
Kaviperarasu Vairamuthu Speaks About Jallikattu In His Poetic Way!

Kaviperarasu “ Vairamuthu Vairamuthu is a very famous Tamil writer, poet, an >> Read More... ” is one among the popular cinema people, who came from the rural area. He knows well about the culture of the Tamils than the city people. Here is his poetry about Alanganallur Jallikattu.

அடங்காநல்லூர்

போதும்

எங்களை முட்டாதீர்

இதற்குமேலும் எங்கள் வால் முறுக்காதீர்

தயவுசெய்து எங்கள் கொம்புகள் மீது அரசியல் சாயம் பூசாதீர்

மூக்கணாங் கயிறுருவி நைலான் கயிறு பூட்டாதீர்

திமிலில் ஒட்டிய ஈயோட்டுவதாய் ஈட்டி எறியாதே சட்டமே

இனியும் தடுத்தால் பூம்பூம் மாடாகி விடுவதன்றி வேறு வழியில்லை

உங்களுக்கு ஆகஸ்ட் 15

எங்களுக்கு இன்று தான்

ஆண்டெல்லாம் எங்களை அடிமைகொண்ட மனிதனை

ஒருநாள் வென்றெடுக்கும் வாய்ப்புக்காக வாடி வாசலில் காத்திருக்கிறோம்

ஏறு தழுவுதல் என்ற தமிழன் எப்படி எங்களைக் காயம் செய்வான்?

தழுவுதல் குற்றமெனில் காதலுமில்லை; காளையுமில்லை

அடிமாடு லாபம்

பிடிமாடு பாவமெனில்

பிள்ளைக்கறி லாபம் பிள்ளைதழுவல் பாவமோ?

ஒவ்வொன்றாய் இழந்த தமிழா

அன்னம் இழந்தாய்

அன்றில் இழந்தாய்

சிட்டுக் குருவிகளையும் வானில் தொலைக்கிறாய்

கடைசியில் காளையினத்தையும் தொலைத்துவிடாதே!

வேளாண்மைக் கலாசாரத்தின் உயிர் விஞ்ஞானம் நாங்கள்

எங்களைக் கட்டித்தழுவிக் காப்பாற்றுங்கள்!

What a wonderful poetry about Bull Taming! Wow! Vairamuthu, Hats off to your poetic skills!

LATEST MOVIE REVIEWS


Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024

Upcoming

2024