Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Sri Lanka’s Northern Province Chief Minister Justice CV Wigneswaran’s Condolence Message For Karunanidhi's Death!

Wednesday, August 8th, 2018
Sri Lanka’s Northern Province Chief Minister Justice CV Wigneswaran’s Condolence Message For Karunanidhi's Death!

Justice CV Wigneswaran, the Chief Minister of the Northern Province in Sri Lanka released a press statement about ‘ Karunanidhi Karunanidhi, the Indian political leader, was born >> Read More... ’s death. In his statement, he praised Karunanidhi for his Tamil knowledge and service to the society. Yet, Wigneswaran stated that Karunanidhi should have taken essential steps to stop the Mullivaikaal tragedy. Here is the statement from Wigneswaran:

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி இலங்கையின் வடக்கு முதல்வரின் அஞ்சலிக் குறிப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவு செய்தி கேட்டு தமிழ் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94 வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்ப காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும் தமிழக அரசியலிலும் தமிழ் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மனநிலைக்கு ஆழ்த்தியுள்ளன. கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் அறுபது ஆண்டுகாலம் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர். ஐந்து தடவைகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒரு வரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம். கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சமூக நீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என நம்புகின்றேன். இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார். கலைஞர் அவர்கள் தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலை கொள்ள விடாமல் தடுப்பதற்காக உழைத்தார். தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மத்திய மாநில தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கினார். தமிழ் மொழி மீது தீவிர பற்று மிக்க கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழை பயிற்று மொழியாக கொண்டவர்கள் பணி நியமனங்களில் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டார் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெற்றுத் தந்ததோடு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றினை உருவாக்க வழி வகுத்தார் இணைய உலகில் முன்னே நிற்க விதை போடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டை கூட்டினார் கேட்கும் உணரும் நீராடும் கடலுடுத்த என்ற மனோன்மணியம் சுந்தரனாரின் பாடலை தமிழ் தாய் வாழ்த்து ஆகியவற்றை கலைஞர் கருணாநிதி அவர்கள் 1956இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அன்றிலிருந்து இலங்கை தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார் எனினும் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு இடம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து அழிவை தடுத்திருக்க முடியும் என்ற ஆதங்கம் எம்மக்கள் மத்தியில் இன்றும் உண்டு. தன் வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாக பதிவு செய்துவிட்டு மறைந்துள்ள கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோபலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை போன்று அவர் பெயரும் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவானாக!

 அன்புடன் க வி விக்னேஸ்வரன்

 முதலமைச்சர்

வட மாகாணம்

 இலங்கை

LATEST MOVIE REVIEWS


Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024