Home Latest Celebrity News Tamil Latest Tamil Celebrity News

Tamilnadu Government Requests People To Celebrate Unpolluted Diwali!

Friday, November 2nd, 2018
Tamilnadu Government Requests People To Celebrate Unpolluted Diwali!

Here is the request from the government to the people of Tamilnadu to celebrate Diwali in an unpolluted way. They had explained their initiatives taken to get a few more hours from the Supreme Court to fire crackers, but failed in the attempt. Have a glance at the report from Tamilnadu government:

செய்தி வெளியீடு: விபத்து மாசு மற்றும் ஒலியில்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்

தீமையினை நன்மை வென்றதை நினைவு படுத்தும் விதமாகவும் நமது கலாச்சாரத்தையும் மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோருவதற்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வதியாக இணைத்துக் கொண்டது. இவ்வழக்கில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் 23/ 10/ 2018 ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்துள்ளது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் தனது ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் தீபாவளி பண்டிகை அன்று இரவு 8 முதல் இரவு 10 வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தது. மாண்புமிகு உச்சநீதிமன்றம் அளித்த இரண்டு மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக 2 மணி நேரம் கூறிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தீபாவளி பண்டிகை நாளன்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதை அனுமதி வழங்க இயலாது எனவும் அந்த ரெண்டு மணி நேரத்தை தமிழ்நாடு அரசை தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும். இதனை கருத்தில் கொண்டு,

 பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை

1.பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

2. உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்

தவிர்க்கவேண்டியவை

1.அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்

2.மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

3.குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

 வெளியீடு: இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை சென்னை-9

LATEST MOVIE REVIEWS


Today's Release

19 Apr, 2024

Upcoming

20 Apr, 2024

Upcoming

20 Apr, 2024

Upcoming

20 Apr, 2024

Upcoming

26 Apr, 2024

Upcoming

31 Aug, 2024

Upcoming

2024

Upcoming

2024